Church Hero Slide
Church Hero Slide
Church Hero Slide
Church Hero Slide
Church Hero Slide

தூய ஆரோக்கிய அன்னை ஆலயத்திற்கு
வரவேற்கிறோம்

சிவகாசி மரியானுஸ் நகரில் உள்ள ஒரு புனித வழிபாட்டு, பிரார்த்தனை மற்றும் சமுதாய இடம். கடவுளின் அன்பை அனுபவிக்க அனைவரும் வரவேற்கப்படுகிறார்கள்.

அருட்பணி. I. அற்புதசாமி

அருட்பணி. I. அற்புதசாமி

பங்குத் தந்தை

வழிபாட்டு நேரம்

சந்திப்பு நேரங்கள்

மேலும் விவரங்கள்...

சிறப்பு வழிபாடுகள்

மேலும் விவரங்கள்...

திருப்பலி நேரங்கள்

மேலும் விவரங்கள்...

நற்கருணை ஆராதனை

மேலும் விவரங்கள்...

திருப்பலி வாசகங்கள்

19 ஜூன், 2026

திருப்பலி வாசகங்கள் ஏற்றப்படுகின்றன...

இன்றைய புனிதர்

புனித ரோமுவால்ட் (St.Romuald )

புனித ரோமுவால்ட் (St.Romuald )

செபம்

வாழ்வளிக்கும் வள்ளலே எம் இறைவா! புனித ரோமுவால்ட் அரசர் குலத்தில் பிறந்தபோதும், ஆடம்பர வாழ்வில், தன் வாழ்வை வாழாமல், கடுமையான செப, தவ வாழ்வை வாழ்ந்து உமக்குரிய நல்ல சீடனாக திகழ்ந்தார். நாங்களும் எங்களின் அன்றாட வாழ்வில் ஏழையாக வாழ்ந்து உம்மை மட்டுமே பற்றிக்கொள்ள உம் வரம் தாரும்.

அவரைப் பற்றி

இவர் ஓர் அரச குலத்தில் தோன்றியவர். இவர் தம் 20 ஆம் வயது வரை மனம் போன போக்கில் வாழ்ந்தார். ஒருமுறை இவரது தந்தை தம் உறவினர் ஒருவரை சொத்து தகராறு காரணமாக, இவரின் கண்ணெதிரில் கொன்று போட்டார். இதற்கு பரிகாரமாக புனித ஆசீர்வாதப்பர் சபை ஒன்றில் சேர்ந்து, கடும் தவம் புரிந்தார். அங்கு துறவிகள் எவ்வித கட்டுப்பாடுமின்றி வாழ்ந்தது. இவருக்கு எரிச்சலை மூட்டியது. எனவே அந்த மடத்தை விட்டு வெளியேறி , முதலில் வெனிஸ் நகருக்கு அருகிலும், பின்னர் பிரன்னீஸ்(Franis) மலைப்பகுதியிலும் ஜெப, தவ வாழ்க்கையை மேற்கொண்டார். ஏறக்குறைய 30 ஆண்டுகள் வட இத்தாலி, தென் பிரான்சு, தென் ஸ்பெயின் பகுதிகளிலும் துறவு மடங்களில் ஒழுங்குமுறைகளை பற்றுறுதியுடன் கடைபிடிக்க வழிகாட்டியாக திகழ்ந்தார். தனிமையில் இறைவனுடன் நெருங்கிய தோழமை கொள்ள விரும்பியவர்களுக்கு, மனிதர்கள் நடமாட்டம் இல்லாத இடங்களில் குடிசைகள் அமைத்துகொடுத்தார். அவற்றில் ஒரு மடம் மட்டுமே கமல்டொலி(Kamaldoli) என்ற இடத்தில், அப்பினைன்(Apinain) என்ற மலையுச்சியில் 1012 ஆம் ஆண்டு 5 குடிசைகள் கொண்டதாக அமைந்தது. புனிதர் தனிப்பட்ட ஒரு துறவு சபையை தோற்றுவிக்க திட்டமிடவில்லை. இருப்பினும் கமல்டொலில் நிறுவப்பட்ட மடம்தான், கடுமையான ஒழுங்குகள் கொண்ட பெனடிக்டின் துறவற சபையாக பெயர் பெற்று காட்சியளிக்கிறது. இதுவே மேலை திருச்சபையில் தவ முனிவர்களுக்கான சபையாக மீண்டும் தோன்றியது. இது சுற்றுச்சுவர் எழுப்பப்பட்ட ஒரு சிற்றூர். இங்கே வாழும் ஒவ்வொரு துறவியும் ஒரு அறை, ஒரு பணித்தளம், ஒரு தோட்டம் இவற்றை பெற்றுக்கொண்டு அங்கே மௌனம் , தனிமை, இவற்றுக்கிடையே இறை பணிபுரிந்தார். வெளி உலக தொடர்பு இல்லாமல் வாழ்ந்தார். இவர் உலகம் முழுவதையும் ஒரு துறவற மடமாகவும், ஒவ்வொருவரையும் ஒரு துறவியாகவும் மாற்றும் திட்டம் வைத்திருந்தார். அமைதியும், கடுந்தவ முயற்சியும்தான் இச்சபையின் சிறப்புக் கூற்றுகளாக அமைந்திருந்தது. 1086 ஆம் ஆண்டிலிருந்து, பெண்களுக்கும் அவரவர்களின் நிலைக்கேற்ப "கமல்டொலிஸ்" மடங்கள் தொடங்கப்பட்டது. இவர் இறந்தபிறகு, இவரின் கல்லறையில் பல புதுமைகள் நடந்தவண்ணமாய் இருந்தது. இதனால் இவர் இறந்த ஐந்து ஆண்டுகளுக்குப்பிறகு, இவர் கல்லறையின்மேல் ஓர் ஆலயம் எழுப்பப்பட்டது.

திருவிழாக்கள்

15 ஆகஸ்ட், 2026

அன்னை மரியாவின் விண்ணேற்பு

அன்னை மரியாவின் விண்ணேற்பு திருநாள், மேலும் திருச்சபை பாதுகாவலர் திருநாள்.

25 டிசம்பர், 2026

கிறிஸ்துமஸ்

இயேசு கிறிஸ்துவின் பிறப்பு விழா.

நேரடி ஒளிபரப்புகள்

மாதா டிவி நேரலை

நேரலை
நேரலையில் காண கிளிக் செய்யவும்

"ஆன்மீக நிகழ்ச்சிகள் மற்றும் திருப்பலிகளுக்காக மாதா டிவியின் நேரடி ஒளிபரப்பைப் பாருங்கள்."

இணையதளத்தில் நேரலையில் காணவும்

செபங்கள்

#prayer

மூவொரு இறைவன் புகழ்

தந்தைக்கும், மகனுக்கும், தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாகுக. தொடக்கத்தில் இருந்தது போல இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக. ஆமென்.

Read More
#prayer

இயேசு கற்றுத் தந்த இறைவேண்டல்

விண்ணுலகில் இருக்கிற எங்கள் தந்தையே, உமது பெயர் தூயது எனப் போற்றப்பெறுக! உமது ஆட்சி வருக! உமது தி...

Read More
#prayer

அருள் நிறைந்த மரியே

அருள் நிறைந்த மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே. பெண்களுள் ஆசி பெற்றவர் நீரே. உம்முடைய திருவயிற்றின் ...

Read More

வீடியோக்கள்

🔴 (15.03.2026) விருதுநகர் மறைவட்ட தவக்கால திருயாத்திரை | நற்கருணை ஆராதனை, சிலுவைப் பாதை, திருப்பலி

திருவிழா கொண்டாட்டம் 2025

ஆலய வரலாறு